பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் “என் இதயம் உடைந்து விட்டது” -முன்னாள் காதலி வருத்தம்

பிரிங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் இந்திய திரையுலகிலும் அமெரிக்காவிலும் பரபரப்பான பேச்சாக உள்ளது.
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் “என் இதயம் உடைந்து விட்டது” -முன்னாள் காதலி வருத்தம்
Published on

பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயது ஆகிறது. நிக்ஜோனாசுக்கு 25 வயது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வைரமோதிரத்தை நிக் ஜோனாஸ் அணிவித்தார்.

இப்போது மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது நிக் ஜோனாஸ் பெற்றோர் பிரியங்காவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்துள்ளனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிக்ஜோனாசின் முன்னாள் காதலியும் ஆஸ்திரேலிய பாடகியுமான டெல்டா கூட்ரெம்முக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரும் நிக்ஜோனாசும் 2011-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். நிக்ஜோனாசை சமரசப்படுத்த டெல்டா கூட்ரெம் முயற்சித்தபோது பிரியங்கா சோப்ராவுடன் காதல் ஏற்பட்டு விட்டது.

இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கும் நிக்ஜோனாசுக்கும் சில பிரச்சினைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது சமரசம் செய்து விடலாம் என்று காத்திருந்தேன். அதற்குள்ளாக பிரியங்கா சோப்ராவின் காதலில் விழுந்து விட்டார் என்றார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் அவர் அழுதார். நிக்ஜோனாசை தவற விட்டு விட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்ததை அறிந்து எனது இதயம் உடைந்து விட்டது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com