பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி

பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி
Published on

விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து அந்த நாட்டிலேயே குடியேறி விட்டார். அவரது சொகுசான ஆடம்பர வாழ்க்கை ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை கணவருடன் சேர்ந்து ரூ.144 கோடிக்கு வாங்கினார். இந்த வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியல் அறைகள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், பார், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் உள்ளன.

புதிதாக ரூ.3 கோடிக்கு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இதுபோல் விலை உயர்ந்த ஆடைகள், செருப்பு, நகைகளை அணிந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கோல்டன் குளோப் விருது விழாவில் கணவர் நிக் ஜோனசுடன் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கவனம் நிக் ஜோனஸ் அணிந்திருந்த கடிகாரத்தை மொய்த்தன. அந்த கடிகாரம் தங்கத்தினால் செய்யப்பட்டு இருந்தது. அதில் நிறைய வைர கற்களும் பதிக்கப்பட்டு இருந்தன. உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் என்று பேசப்பட்டது. தற்போது அந்த கடிகாரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com