பிரியங்கா சோப்ரா விவாகரத்து...? சமூக வலைதள பக்கத்தில் இருந்து கணவர் பெயர் நீக்கம்...!

பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
பிரியங்கா சோப்ரா விவாகரத்து...? சமூக வலைதள பக்கத்தில் இருந்து கணவர் பெயர் நீக்கம்...!
Published on

மும்பை,

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார். பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து 3 மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியானது.

விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்தார். பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது மீண்டும் அதுபோல் விவகாரத்து குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரனம் அவர் தனது கணவர் நிக்ஜோனஸ் பெயரை தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி உள்ளார்.

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் இடையே திருமணத்துக்கு பிறகு சுமுகமான உறவு இல்லை. வேலை மற்றும் விருந்துக்கு செல்வது உள்ளிட்ட விஷயங்களில் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை. தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனசை வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் பிரியங்காவுக்கு உள்ளது.

திருமணத்துக்கு முன்பு அமைதியானவராக இருந்த பிரியங்கா சோப்ரா இப்போது கோபக்காரராக இருப்பதும், 38 வயது நிரம்பிய பிரியங்கா, 23 வயது நிக் ஜோனசுடன் பார்ட்டிகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகிறார் என்று கணவர் குடும்பத்தினர் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கூறும் போது இவை எல்லாம் வதந்திகள், வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறி உள்ளார்.

இதற்கிடையில், பிரியங்கா சோப்ரா நேற்று இரவு, நிக் ஜோனஸ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம், பிரியங்கா சோப்ராவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Nick Jonas (@nickjonas)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com