எனது படங்களுக்கு சிக்கல் தீர்ந்தது - நடிகர் விமல்

பசங்க, களவாணி, வாகைசூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விமல் மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்தபோது பிரச்சினை ஏற்பட்டு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
எனது படங்களுக்கு சிக்கல் தீர்ந்தது - நடிகர் விமல்
Published on

இதனால் விமல் படங்கள் சட்ட பிரச்சினைகளில் சிக்கின. தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சமரச தீர்வு ஏற்பட்டு உள்ளதாக விமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விமல் கூறும்போது, எனது படங்கள் தொடர்பாக எனக்கும், தயாரிப்பாளர் சிங்கார வேலனுக்கும் சில பிரச்சினைகள் இருந்தன. இது எனது படங்கள் திரைக்கு வருவதில் தடைகளை ஏற்படுத்தின. தற்போது அந்த பிரச்சினைகளை சட்டரீதியாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். அவரவர் விஷயங்களில் தலையிடுவது இல்லை என்றும் முடிவு செய்து இருக்கிறோம்.

இனிமேல் எனது படங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன். தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமமும் கொடுக்காத பட அதிபர் மற்றும் இயக்குனர் விரும்பும் கதாநாயகனாக எனது சினிமா பயணம் தொடரும். பிரச்சினை தீர்ந்ததால் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது என்னை தொடர்பு கொண்டு புதிய படங்களில் நடிப்பது பற்றி பேசி வருகிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com