'சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தன'- நடிகை மீரா ஜாஸ்மின்

'சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தன'- நடிகை மீரா ஜாஸ்மின்
Published on

தமிழில் ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சண்டக்கோழி, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, திருமகன், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 2014-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

மீண்டும் நடிப்பது குறித்து மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், "என் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால் நடிப்பின் மீது கவனம் செலுத்த முடியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தேன். இப்போது பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்துள்ளேன். எனவேதான் சினிமாவிலும் எனது பயணத்தை தொடங்கி இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எனக்கு அமோக ஆதரவு தருகிறார்கள். அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com