கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்க டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகன் ஆனார்

கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கும் படத்தில் டைரக்டர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகன் ஆனார்.
கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்க டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகன் ஆனார்
Published on

புது வசந்தம், சூர்யவம்சம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, கோகுலம், வானத்தைப்போல உள்பட பல படங்களை இயக்கியவர், விக்ரமன். இவருடைய மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.

இந்தப் படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெனாலி, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்த டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், தனது மூன்றாவது தயாரிப்பாக இந்தப் படத்தை தயாரிக்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் ஆகிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படைப்பாக, இந்தப் படம் தயாராகிறது. சூர்ய கதிர், கார்த்தி கேயன் இருவரும் இயக்குகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com