ருக்மணி வசந்த்தின் நடிப்பை விமர்சித்த தயாரிப்பாளர்- ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

நடிகை ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க உள்ளார்.
ருக்மணி வசந்த்தின் நடிப்பை விமர்சித்த தயாரிப்பாளர்- ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
Published on

ஐதராபாத்,

கன்னட திரை உலகில் அறிமுகமாகி "மதராஸி, ஏஸ்" போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ருக்மணி வசந்த். ரிஷப் ஷெட்டி நடிப்பில் நேற்று வெளியான காந்தாரா சாப்டர்-1 படத்திலும் நடித்துள்ளார். படத்தின் புரொமோஷன் விழா ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ரவிஷங்கர், ருக்மணி வசந்த் நடிப்பதை நான் அருகில் இருந்து பார்த்து உள்ளேன்.

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் எங்களது புதிய படத்திலும் ருக்மணி வசந்த் நடிக்கிறார். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். திறமைக்கு இணையான அல்லது குறைந்த பட்சம் அவருக்கு அருகில் வரக்கூடிய ஒரு கதாநாயகியை தேடினோம். ருக்மணியிடம் மட்டும் அதை கண்டுபிடிக்க முடிந்தது. ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ருக்மணி வசந்த் 80 சதவீதத்தையாவது கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என பேசினார்.

அவரது கருத்துக்கள் வைரலாக பரவியதுடன் எதிர்ப்புகளும் அவரை நோக்கி பறந்து வந்த வண்ணம் உள்ளன. உங்கள் ஹீரோவை விளம்பரப்படுத்த ருக்மணியை அவமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பது உள்பட பல்வேறு கண்டன கருத்துக்களை பதிவிட்டு தயாரிப்பாளருக்கு எதிராக டிரோல் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com