லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட்

நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட்
Published on: 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்படிப்பு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு இன்று சிறப்பு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஹேசம் அப்துல் வஹாப் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com