லியோ டிரெய்லர் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் டுவீட் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் லியோ பட டிரெய்லர் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
லியோ டிரெய்லர் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் டுவீட் - ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரல் ஆனது.

இந்த நிலையில், லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நடிகர் விஜயின் 'லியோ' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com