'காசேதான் கடவுளடா' படத்தின் புதிய அப்டேட்..!

நடிகர் சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
'காசேதான் கடவுளடா' படத்தின் புதிய அப்டேட்..!
Published on

சென்னை,

இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில் கடந்த 1972-ம் ஆண்டு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்துள்ளனர்.

ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகிவுள்ளது.

அதன்படி, 'காசேதான் கடவுளடா' படத்தின் புரோமோ பாடலை படக்குழுவினர் முடித்துள்ளனர். இதனை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 'காசேதான் கடவுளடா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com