இலவச தடுப்பூசி வழங்கிய பிரணிதா

தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதாவுக்கும் நிதின் ராஜுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இலவச தடுப்பூசி வழங்கிய பிரணிதா
Published on

இந்த நிலையில் பிரணிதா தனது தொண்டு நிறுவனம் மூலம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் தடுப்பூசி முகாம் அமைத்து சொந்த செலவில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கினார்.

நடிகை பிரணிதா சமீபத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டது பற்றி அளித்த பேட்டியில் ''கொரோனா காரணமாக எளிமையாக திருமணம் செய்து கொண்டோம். குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள். நண்பர்கள் இருந்தனர். இன்னொரு புறம் கொரோனா பயமும் இருந்தது. நாடு முழுவதும் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் உள்ளனர். மன அழுத்தம் உள்ளது. இந்த நிலையில் ஆடம்பரமாக திருமணம் செய்வது சரியல்ல என்று எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com