4கே தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீசாகும் 'புதுப்பேட்டை'

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
சென்னை,
பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்த ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த 'புதுப்பேட்டை' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
2006ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை', ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படத்தில் முதன்முறையாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். கேங்ஸ்டர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவானது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் வருகிற 28ந் தேதி தனது 42 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (26-ம் தேதி) புதுப்பொலிவுடன் 4கே தரத்தில் தமிழ்நாடு முழுவதும் 'புதுப்பேட்டை' படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.






