சத்யாவை கொன்ற சதீஷை ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் - விஜய் ஆண்டனி ஆதங்கம்

சத்யாவை கொன்ற சதீஷை ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.
சத்யாவை கொன்ற சதீஷை ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் - விஜய் ஆண்டனி ஆதங்கம்
Published on

சென்னை,

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2-ம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா (20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைப்பாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.

இதையைடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். இந்த நிலையில், ஓடும் ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீசுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை வருகிற 28-ந் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவி சத்தியாவை கொன்ற சதீஷை ரெயிலில் தள்ளி விட்டு தண்டிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்தோடு பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com