பிரபல பாடகியின் கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் கொள்ளை

பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகி சுனந்தா சர்மா
பிரபல பாடகியின் கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் கொள்ளை
Published on

லண்டன்,

பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகி சுனந்தா சர்மா. இவர் பஞ்சாப் படத்திலும் நடித்துள்ளார். இவர் பாடிய பஞ்சாபி பாடல்கள் ஆல்பமாக யூடியூபில் வெளியாகி மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், பாடகி சுனந்தா சர்மா இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது சொகுசு காரை வணிக வளாகத்தின் தரைதளத்தில் கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது சொகுசு காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. காரின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 2 பைகள், ஒரு சூட்கேச் உள்ளிட ரூ. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாடகி சுனந்தா சர்மா தெரிவித்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாடகி சுனந்தா சர்மா லண்டன் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com