விஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய தபு

இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
PuriSethupathi: Tabu calls it ‘South Ka Dhamaka’
Published on

சென்னை,

நடிகை தபு தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன் நடிக்கும் பான்-இந்திய படத்தின் படப்பிடிப்பை அவர் தற்போது தொடங்கி இருக்கிறார். இதில் அவர் முக்கிய வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்திய தகவலின்படி, தற்காலிகமாக பூரிசேதுபதி எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதி, தபு, சம்யுக்தா மேனனுடன் இணைந்து துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com