விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு


Push-pull at Vijay Antonys concert
x

கோவை கொடிசியா மைதானத்தில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை,

கோவையில் நடைபெற்ற இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரே பாதையில் ரசிகர்களை இசை நிகழ்ச்சிக்கு செல்ல வரிசையில் நிற்க வைத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

'விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட்' என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி தற்போது ''சக்தி திருமகன்'' படத்தில் நடித்துள்ளார். கடந்த 19-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1 More update

Next Story