டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'புஷ்பா 2' படம்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகிற 5-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'புஷ்பா 2' படம்
Published on

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2' படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு 'புஷ்பா 2 தி ரூல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தில் மைம் கோபி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படம் வருகிற 5-ந் தேதி உலகளவில்  சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது.

ஆனால் தெலுங்கானாவில் ஒரு சில குறிப்பிட்ட திரைகளில் மட்டும் 4-ந் தேதி இரவு திரையிடப்பட உள்ளது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பே இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. இப்படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் உலகளவில் சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியளவில் டிக்கெட் முன்பதிவில் அதிக வசூல் செய்த படம் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com