புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் - அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் - அல்லு அர்ஜுன்
Published on

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.250 கோடி வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

'புஷ்பா 2' படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர். அப்போது சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுன் கூறியதாவது, "சிறப்பு காட்சியின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால், புஷ்பா-2 கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை; என் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன்; எங்கள் குழுவினருடன் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com