நாளை வெளியாகும் 'புஷ்பா 2' டிரெய்லர்... அல்லு அர்ஜுன் வெளியிட்ட போஸ்டர் வைரல்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாக உள்ளது.
நாளை வெளியாகும் 'புஷ்பா 2' டிரெய்லர்... அல்லு அர்ஜுன் வெளியிட்ட போஸ்டர் வைரல்
Published on

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நடனமாடும் அந்த பாடலுக்கு 'கிஸ்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலை உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.03 மணியளவில் வெளியாக உள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com