ஆண்டனி வர்கீஸின் கட்டாளனில் இணைந்த ''புஷ்பா'' பட நடிகர்

இப்படத்திற்கு 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
சென்னை,
''புஷ்பா: தி ரைஸ்'' மற்றும் தில்லு ஸ்கொயர் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ராஜ் திரந்தாசு, ஆண்டனி வர்கீஸின் அதிரடி படமான கட்டாளனில் இணைந்துள்ளார்.
'மார்கோ' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்பு, தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது 'கட்டாளன்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பால் ஜார்ஜ் இயக்கும் இப்படத்திற்கு, 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், இசையமைக்கிறார்.
பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இப்படத்தில் சமீபத்தில் சுனில், கபீர் துஹான் சிங், நடிகை ரஜிஷா விஜயன் இணைந்த நிலையில், தற்போது ராஜ் திரந்தாசு இணைந்திருக்கிறார்.
Related Tags :
Next Story






