புஷ்பாவோட ரூலு.. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ..!

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு 'புஷ்பா-தி ரூல்' படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
புஷ்பாவோட ரூலு.. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ..!
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் 'புஷ்பா'. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை நடிகர் அல்லு அர்ஜூன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 'புஷ்பா-தி ரூல்' படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 3 நிமிடம் 14 நொடிகள் நீளமுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com