“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

இயக்குநர் இளனின்‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ படம் ஆகஸ்ட்21ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
Published on

‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம்’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘பி​யார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ ஆகிய படங்​களை இயக்​கிய இளன், தற்​போது ‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ என்ற படத்​தின் மூலம் கதாநாயகனாக அறி​முக​மாகிறார். இந்​தப் படத்தை அவரே எழுதி, இயக்​கி​யுள்​ளார்.

சான்வீ மேக்னா நாயகி​யாக நடித்​துள்ள இப்​படத்​தில் ராதிகா சரத்கு​மார், யோகி பாபு, எம்​.எஸ்​.​பாஸ்​கர், கீதா கைலாசம், இளங்கோ குமர​வேல், செந்​தில், மாறன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார். ‘மேட் இன் கொரி​யா’​வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்​துள்​ளார்.

திரு​மணத்​துக்​குப் பிறகும் பெற்​றோர் வீட்டை விட்​டுச் செல்ல மறுக்​கிறார் நாயகி சான்​வீ. அதனால், அவரது கணவ​ரான இளன், மனைவி வீட்​டுக்கே குடி பெயர்​கிறார். இதன் பின்​னர் தொடங்​கும் குடும்ப கலாட்​டா, கலாச்​சார மோதல்​கள், உறவு சிக்​கல்​கள் மற்றும் உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.

ஓடிடி வெளியீடு

‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ படம் ஆகஸ்ட்21ம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி கதாபாத்திர அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது.

பாடல்கள் வெளியீடு

‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அட்ராசிட்டி’ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம்‘ இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் இளன் எழுதிய இப்பாடலை யுவன் சங்கர் ராஜா, ரம்யா, லஷ்மி ஜெய், மதுரை சரோஜாம்மா ஆகியோர் பாடியுள்ளனர்.இப்படம் ஆகஸ்ட்21ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com