''இசையின் தரம் தற்போது குறைந்து வருகிறது''- சாம் சி.எஸ்


Quality of music becoming less now-SamCS
x
தினத்தந்தி 22 July 2025 6:45 PM IST (Updated: 22 July 2025 6:45 PM IST)
t-max-icont-min-icon

சாம்.சிஎஸ் தற்போது இசையமைத்திருக்கும் படம் 'மகாவதார் நரசிம்மா'.

சென்னை,

சமீபத்திய பேட்டியில் சாம் சி.எஸ் பேசுகையில்,

''ரீல்ஸ் மூலம் பாடல்கள் ஹிட் ஆகிவிட்டால், ஒரு மாதத்திற்குப் பிறகு அது பிளேலிஸ்ட்டில் இருக்காது. ஹிட் என்றால் ஒரு மாதத்திற்கு பின்பும் பிளேலிஸ்டில் இருக்க வேண்டும் அல்லவா. ஒன்று இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் பிளேலிஸ்ட்டில் இருக்காது.

அப்போது எப்படி அந்த பாடல்களை ஹிட் என்று கூற முடியும். இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் சாரின் பாடல்களை நாம் ஹிட் என்று சொல்கிறோம். ஏனென்றால் இத்தனை வருடங்களை கடந்தும் அது நம் பிளேலிஸ்ட்டில் இருக்கின்றன. இன்றும் அதற்கு மதிப்பு இருக்கின்றன.

இசையின் தரம் தற்போது குறைந்து வருகிறது. ஒரு பாடலின் 30 வினாடிகள் லைன் போதும் பாடலை ஹிட் பண்ணிடலாம் என்கிற எண்ணத்தை மற்றிவிட்டு, பாடல் முழுவதையும் கேட்க வைக்க வேண்டும்" என்றார்.

இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் தற்போது இசையமைத்திருக்கும் படம் 'மகாவதார் நரசிம்மா'. அஸ்வின் குமார் எழுதி இயக்கி இருக்கும் இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story