ராணி மகாராணி... இங்கிலாந்து ராணி... இணையத்தில் பரவும் வடிவேலுவின் பாடல்

‘லவ் பேர்ட்ஸ்’ படத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ராணி மகாராணி... இங்கிலாந்து ராணி... இணையத்தில் பரவும் வடிவேலுவின் பாடல்
Published on

சென்னை,

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். ராணி எலிசபெத் மறைவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து ராணி குறித்து நடிகர் வடிவேலு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் தற்போது பரவி வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான 'லவ் பேர்ட்ஸ்' திரைப்படத்தில், நடிகர் வடிவேலு லண்டன் நகர வீதிகளில் சுற்றித் திரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அப்போது பக்கிங்காம் அரண்மனையின் முன்பு இங்கிலாந்து ராணியின் வாகனத்தைப் பார்த்து அவர், "ராணி மகாராணி... இங்கிலாந்து ராணி... வேக வேகமாகப் போகும் எலிசபெத் ராணி" என்று பாடுவார். அந்த காட்சியை தற்போது இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com