

மீனம்பாக்கம்,
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரிடம் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பி கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்காமல் புன்னகையுடன் கையெடுத்து கும்பிட்டு விட்டுச்சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து ரிஷிகேஷ் செல்ல அவர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.