நடிகர் மாதவன் பெயரில் போலி இன்​ஸ்​டாகிராம் கணக்கு

தனது பெயரில் போலி​யான இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு குறித்து சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக​ மாதவன் கூறி​யுள்​ளார்.
நடிகர் மாதவன் பெயரில் போலி இன்​ஸ்​டாகிராம் கணக்கு
Published on

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். மாதவன் இந்தியில் வெளியான சைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுடன் நடித்துள்ளார். மாதவன் கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கியிருந்தார். மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடித்து வருகிறார். மாதவன் நடித்துள்ள ‘லெஜஸி’ வெப்சீரிஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது.

முன்​னணி நடிகர், நடிகை​களின் பெயரில் சமூக வலை​தளங்​களில் போலி​யான கணக்​குத் தொடங்கி மோசடி​யில் ஈடு​பட்டு வரு​வது அதி​கரித்து வரு​கிறது. இப்​போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்​குத் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘ரோஹன்​மைரா 2’ என்ற இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு தனது பெயரை​யும், தனது குழு​வின் பெயரை​யும் பயன்​படுத்தி பொது​மக்​களிடம் பேசி வரு​வ​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார். “இந்த நபருக்​கும் எனக்​கும் அல்​லது எனது குழு​வுக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்​லை. இது முற்​றி​லும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்​பாகப் பேச வேறு எந்​தக் கணக்​குக்​கும் அனு​மதி இல்​லை” என்று அவர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். மேலும், அந்த நபர் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com