ஆர். பி. சவுத்ரி மறைவு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது - ரஜினிகாந்த்

ஆர். பி. சவுத்ரி எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழ வைத்தவர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஆர். பி. சவுத்ரி மறைவு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது - ரஜினிகாந்த்
Published on

சென்னை,

நடிகர் ஜீவாவின், தந்தையும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி. சவுத்ரி தனது சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

என் அருமை நண்பர் சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.

அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com