ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 'ராக்கா'; ரிலீஸ் குறித்த தகவல் வெளியீடு

'ராக்கா' திரைப்படம் 2027 டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராக்கா
Published on

சென்னை,

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 'ராக்கா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்களை கவரும் சிறப்பம்சங்கள்

சுமார் ரூ.800 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளியீட்டு தேதி குறித்து தகவல்

இந்த நிலையில், 'ராக்கா' திரைப்படம் 2027 டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உயர்தர காட்சி வடிவமைப்பு பணிகளுக்காக சுமார் 10 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பு

படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com