ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ராஷி கன்னா...வைரலாகும் புகைப்படங்கள்


Raashi Khanna celebrates her birthday with fans...photos go viral
x

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ராஷி கன்னா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

நேற்று (நவம்பர் 30), நடிகை ராஷி கன்னாவின் 35-வது பிறந்தநாள். அவர் தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தெலுசு கடா. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்கில் நடித்து வருகிறார். நட்சத்திர இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இது ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

1 More update

Next Story