சீனியர் ஹீரோ படத்தில் நடிக்க மறுத்த ராசி கன்னா?

ராசி கன்னா தற்போது உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார்.
Raashi Khanna rejects senior hero’s film!
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராசி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தெலுசு கடா. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அடுத்து அவர் பவன் கல்யாணுடன் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தவிர, சமீபத்தில் அவருக்கு மற்றொரு பிரபல நட்சத்திரத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ராசி கன்னா ஆரம்பத்தில் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியநிலையில் பின்னர் தனது கதாபாத்திரம் தெரிந்த பிறகு அதை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது வேறொரு நடிகையைத் தேடி வருவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com