

சென்னை,
நடிகை ராஷி கன்னா, சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறும்போது, பெண்கள் எந்த சூழலிலும், எதற்காகவும் கனவுகளை நிறுத்தாதீர்கள், உங்கள் முயற்சிகளில் இருந்து பின்வாங்கவும் செய்யாதீர்கள்", என்று குறிப்பிட்டார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னாவின், அலட்டல் இல்லாத நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்' ஆக இருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.
அந்த வகையில், நடிகை ராஷி கன்னா, சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறும்போது, "கனவுகள் என்பது அழகான விஷயம். அந்த கனவுகளை நோக்கிய பயணம் என்பதும் அழகானது. பொதுவாகவே வாழ்க்கையில் பல தேடல்களைக் கடந்துகொண்டிருக்கிறோம். நானும் அப்படித்தான். எனது ஒவ்வொரு நாளும் தேடலுடன் தொடங்குகிறது. எனக்கான கனவுகள் நிறைய இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக முடித்து நகர்ந்து செல்கிறேன்.
இங்கு நம் பாதையில் இருக்கும் தடைகள் தோல்விகள் கிடையாது. வெற்றிக்கான உந்துசக்திகள் தான். எனவே கனவை துரத்துவதை விடாதீர்கள். குறிப்பாக பெண்கள் எந்த சூழலிலும், எதற்காகவும் கனவுகளை நிறுத்தாதீர்கள், உங்கள் முயற்சிகளில் இருந்து பின்வாங்கவும் செய்யாதீர்கள்", என்று குறிப்பிட்டார்.