கவனத்தை ஈர்த்த ராசி கன்னாவின் பதிவு

இன்ஸ்டாகிராமில் ராசி கன்னா பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை,
சமீபத்தில் "தெலுசு கடா" படத்தில் நடித்திருந்த ராசி கன்னா, அடுத்து பவன் கல்யாணின் "உஸ்தாத் பகத் சிங்" படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், ராசி, ஐரோப்பாவில் விடுமுறையை அனுபவித்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 2 சிறிய வீடியோக்களை அவர் பகிர்ந்தார். அதில் ஒன்றில், அவர் ஒருவரைக் கட்டிப்பிடிப்பது போல் தெரிகிறது. இதற்கு "ஒரு கட்டிப்பிடியில் என் உலகம் மென்மையாகிறது" என்று தலைப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ராசி கண்களை மூடிக்கொண்டு கேமராவிற்கு வெட்கப்பட்டு, "இது என்னுடைய முகம் 'படம் எடுக்காதீங்கள்" என்று தலைப்பிட்டார். இது இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
Related Tags :
Next Story






