ராயன் திரைப்படம்: தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

'ராயன்' படம் குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராயன் திரைப்படம்: தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்
Published on

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திள்ளனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.

தனுஷ் நடித்த படங்களிலேயே ராயன் படம்தான் அதிக வசூலித்த படமாகும். உலகளவில் இதுவரை ரூ.155 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் 'ராயன்' படத்தையும், தனுஷையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "ராயன் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பது எப்போதும் தெரியும். ஆனால் நீங்கள் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. இன்னும் நிறைய படங்களை இயக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com