தனுஷின் 'ராயன்' திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியானது

'ராயன்' திரைப்படத்தின் 3-வது பாடலான 'ராயன் ரம்பில்' பாடல் வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 -ம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் அடுத்த பாடலான 'ராயன் ரம்பில்' என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் இரு ராப் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை ஏ.ஆர் ரகுமான் இசையில் அறிவு எழுதி பாடியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 6 ) தனியார் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com