''கூலி'' டிரெய்லரில் இடம்பெற்ற நடிகை... யார் தெரியுமா?

''கூலி'' ரச்சிதாவின் தமிழ் அறிமுக படமாகும்.
சென்னை,
கூலி படத்தில் ''ரச்சிதா ராம்'' நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது.
''கூலி'' ரச்சிதாவின் தமிழ் அறிமுக படமாகும். கன்னட சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான புல்புல் படத்தின் மூலம் அறிமுகமான ரச்சிதா, சமீபத்தில் கல்யாண் தேவுக்கு ஜோடியாக சூப்பர் மச்சி (2022) மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நடிப்புக்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் அவரது கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாதநிலையில், வருகிற 14-ம் தேதி படம் திரைக்கு வரும்போது மட்டுமே அவரது கதாபாத்திரம் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story






