ரச்சிதா நடித்த “99/66” படத்தின் டிரெய்லர் வெளியானது


தினத்தந்தி 5 Jan 2026 6:57 PM IST (Updated: 5 Jan 2026 7:00 PM IST)
t-max-icont-min-icon

ரச்சிதா மகாலட்சுமி நடித்த “99/66” படம் அடுக்குமாடி குடியிருப்பை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார் .

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் “99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு”. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரச்சித்தா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். உப்பு கருவாடு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வெளியிடப்பட்டது.

“சென்​னை​யில் உள்ள 99 வீடு​கள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பை கதைக்களமாக கொண்டுள்ளதால் , இப்படத்திற்கு ‘99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு’ என்று பெயர் வைத்​துள்​ளோம்.அந்​தக் குடி​யிருப்​பில் அவ்​வப்​போது நடை​பெறும் சில அமானுஷ்ய சம்​பவங்​கள், குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்​திப் பீதி கொள்ள வைக்​கிறது. எதனால் அப்​படி நடக்​கிறது?அதன் பின்​னணி​யில் இருப்​பது என்ன? என்​ப​தைச் சபரி​யும், ரக்​சி​தா​வும், ஸ்வேதா​வும், எம்​.எஸ்​.மூர்த்​தி​யுடன் சேர்ந்து கண்​டு​பிடிக்க முயல்​கிறார்​கள். அது முடிந்​ததா என்​பது திரைக்​கதை.” என்று இயக்குனர் எம்​.எஸ்​.மூர்த்தி தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story