நடிகர் பிரஜின் நடித்துள்ள 'டி3' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் பிரஜின் நடித்துள்ள 'டி3' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரஜின் நடித்துள்ள 'டி3' படத்தின் டீசர் வெளியானது..!
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'டி 3'. இந்த படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரே நாளில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரஜின் போலீசாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரை நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார், ஆர்யா, இயக்குனர் சீனுராமசாமி உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com