இந்தியாவில் ரிலீசாகும் ராதிகா ஆப்தேவின் 'சிஸ்டர் மிட்நைட்'


Radhika Aptes award-winning film Sister Midnight set for India release
x

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் கடந்த 16 அன்று அமெரிக்காவில் வெளியானது.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த 'தோனி' படத்தின் மூலம் அறிமுகமானார். "ரத்த சரித்தரம், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், 'கபாலி" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சிஸ்டர் மிட்நைட்'. கரண் கந்தாரி இயக்கிய இப்படத்தை அலாஸ்டர் கிளார்க் மற்றும் அன்னா கிரிபின் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இதில், அசோக் பதக், சாயா கடம் மற்றும் ஸ்மிதா தம்பே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் கடந்த 16 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது, ஜூன் 11 அன்று பிரான்சில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் இப்படம் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 23 முதல் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சிஸ்டர் மிட்நைட்டை பார்க்கலாம்.

1 More update

Next Story