பிரெஞ்சு மொழி படத்தில் ராதிகா

ராதிகா, முதன்முறையாக பிரெஞ்சு மொழி படத்தில் நடிக்க இருக்கிறார்.
பிரெஞ்சு மொழி படத்தில் ராதிகா
Published on

'கிழக்கே போகும் ரெயில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராதிகா, 1980 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

சினிமா தவிர சின்னத்திரையிலும் கோலோச்சி வருகிறார். 'சித்தி', 'அண்ணாமலை', 'வாணி ராணி', 'செல்லமே', 'அரசி' போன்ற பல மெகா சீரியல்களை தயாரித்து நடித்துள்ளார்.

தற்போது படங்களில் இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமா பயணத்தில் 45 ஆண்டுகளை கடந்திருக்கும் ராதிகா, முதன்முறையாக பிரெஞ்சு மொழி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்புக்காக அவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். இது திரில்லர் படம் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அத்துடன், பிரெஞ்சு மொழி படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்த தனது கணவர் சரத்குமாருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதையொட்டி ராதிகாவுக்கு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com