சூர்யா- ஜோதிகா காதல் திருமணம் செய்ய முக்கிய காரணம் ராதிகாதான்.. போட்டு உடைத்த சிவக்குமார்

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், சூர்யா – ஜோதிகா காதலுக்கு நடிகை ராதிகாதான் காரணம் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
சூர்யா- ஜோதிகா காதல் திருமணம் செய்ய முக்கிய காரணம்  ராதிகாதான்.. போட்டு உடைத்த சிவக்குமார்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளாக விளங்குபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1999-ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தொடங்கிய நட்பு, பின்னர் காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இருவரின் காதலுக்கும் முதலில் நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக அப்போது பேச்சுகள் எழுந்தன. இதனை சிவக்குமார் பலமுறை வெளிப்படையாகவும் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், சூர்யா – ஜோதிகா காதலுக்கு நடிகை ராதிகாதான் காரணம் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சூர்யா – ஜோதிகா காதல் திருமணம் நடைபெற முக்கிய காரணம் ராதிகாதான். ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் போது தனியாக இருந்த சூர்யாவை, ஜோதிகாவிடம் பேசும்படி ஊக்குவித்தவர் ராதிகா. என் மகனையும் ஜோதிகாவையும் சேர்த்து வைத்த ‘அயோக்கியப் பெண்ணே’ இவர்தான்” என்று நகைச்சுவையாக ராதிகாவை சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா உட்பட அனைவரும் கைதட்டி சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய சிவக்குமார், “திரைப்படங்களில் நான் 150 கதாநாயகிகளுடன் காதலிப்பது போல நடித்துள்ளேன். அப்படியிருக்கையில் என் மகனின் காதலுக்கு நான் எப்படி ‘நோ’ சொல்ல முடியும்?” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com