ரசிகர் செயலால் ஆத்திரம்; கார் கதவை அறைந்து சாத்திய பிரபல நடிகை

யோகா வகுப்பை விட்டு வெளியே வந்தபோது, ரசிகர் செயலால் ஆத்திரம் அடைந்த பிரபல நடிகை கார் கதவை அறைந்து சாத்தியதற்கு பல விமர்சனங்கள் வந்துள்ளன.
ரசிகர் செயலால் ஆத்திரம்; கார் கதவை அறைந்து சாத்திய பிரபல நடிகை
Published on

புனே,

தென்னிந்திய படங்களிலும், இந்தி திரையுலகிலும் புகழ்பெற்ற மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆன குட்லக் ஜெர்ரி படத்திலும் நடித்துள்ளார்.

இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை தயாரித்துள்ளார். துணிவு படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.

நடிகை ஜான்வி கபூர், யோகா பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். அதுபற்றிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

இவருக்காக ஜிம்முக்கு வெளியே காத்திருக்கும் ரசிகர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார். அவர்களுடன் ஒன்றாக செல்பி உள்ளிட்ட புகைப்படங்களையும் எடுத்து கொள்ள அனுமதி வழங்குவார். அவர்களிடம் உரையாடவும் கூட செய்வார்.

ஆனால், இந்த முறை அப்படி இல்லை. ரசிகர் ஒருவர் ஜான்வியிடம் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதித்து உள்ளார்.

எனினும், யோகா வகுப்பை விட்டு வெளியே வந்த ஜான்வியை அந்த ரசிகர் சற்று நெருங்கி வந்துள்ளார். இதனால், அசகவுரியமடைந்த ஜான்வி, சற்று தள்ளி சென்று பூந்தொட்டி அருகே சாய்ந்து நின்று உள்ளார்.

அந்த ரசிகர் புகைப்படம் எடுத்து கொண்டதும், அதுவரை அமைதியாக இருந்த ஜான்வி பின்னர் கார் அருகே சென்று கதவை ஆத்திரத்தில் அறைந்து சாத்தியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானது. இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஏன் அவரை அசவுகரியப்படுத்துகிறீர்கள்? என்றும், அவரை தனியே விடுங்கள் என்றும் சிலர் இணையதளத்தில் கூறியுள்ளனர்.

எனினும் ஜான்வி ஓவராக நடிக்கிறார் என்றும் நாடகம் ஆடுகிறார் என்றும் ஒரு சிலர் தெரிவித்து உள்ளனர். திரை பிரபலங்கள் எது செய்தபோதும் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வது வாடிக்கையாகி விட்டது.

சமீபத்தில் அவரது காதலர் என கூறப்படும் ஷிகார் பஹாரியாவுடன் குடும்ப விருந்து நிகழ்ச்சியில் அவர் ஒன்றாக கலந்து கொண்டது ரசிகர்கள் இடையே பலவித விமர்சனங்களை எதிர்கொண்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com