'எல்.சி.யூ.'வில் இணையும் ராகவா லாரன்ஸ்?

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.
'எல்.சி.யூ.'வில் இணையும் ராகவா லாரன்ஸ்?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக 'பென்ஸ்' படம் உருவாகிறது. இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் சாயலில் இடம் பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com