மாற்றத்திற்காக ரஜினியை சந்தித்த நடிகர் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
மாற்றத்திற்காக ரஜினியை சந்தித்த நடிகர் லாரன்ஸ்
Published on

சென்னை ,

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வௌயாகின. இதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

இதுதவிர மற்றொரு திரைப்படம் ஹண்டர். மாபெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மேலும், இது ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25-வது திரைப்படமாகும்.

இதுவரையில் பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி அது ராகவா லாரன்ஸின் கண்ணில் பட, அந்த வீடியோவை லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் டிரெண்டாகியது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது, "தலைவர் சூப்பர் ஸ்டாரை "மாற்றம்" அமைப்பிற்காக ஆசிகளைப் பெற சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும், குருவே சரணம்" என ரஜினிகாந்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, மாற்றம் என்கிற பெயரில் தன்னார்வ அமைப்பைத் துவங்கி ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் செய்கிறார். அதில் ஒரு பகுதியாக, ஏழ்மை நிலையிலுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களைக் கொடுத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com