தலைவரின் ஸ்டைல் அட்டகாசம் - ரஜினியை பாராட்டிய ராகவா லாரன்ஸ்

'ஜெயிலர்' படத்தின் காவாலா பாடலை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தலைவரின் ஸ்டைல் அட்டகாசம் - ரஜினியை பாராட்டிய ராகவா லாரன்ஸ்
Published on

சென்னை,

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த பாடலை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தலைவர் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைல், அனிருத் இசை, தமன்னா நடனம் மற்றும் ஜானியின் நடன அமைப்பு ஆகியவை 'காவாலா' பாடலுக்கு மேலும், ஆற்றலை சேர்க்கிறது. 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைய நெல்சன் திலீப் குமார், சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com