சந்திரமுகி-2 வெளியாவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.
சந்திரமுகி-2 வெளியாவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்
Published on

சென்னை,

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார். ரஜினிகாந்தின் காலில் விழுந்து ராகவா லாரன்ஸ் ஆசி பெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com