ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் 'ருத்ரன்' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 1962-ம் ஆண்டு வெளியான 'வீரத்திருமகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பாடாத பாட்டெல்லாம்' என்ற பாடலின் ரீமிக்ஸாக இந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடரமணன், எம்சி டி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ருத்ரன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com