ராகவா லாரன்ஸின் "பென்ஸ்" படத்தில் இணைந்த பிரபல நடிகர்

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
ராகவா லாரன்ஸின் "பென்ஸ்" படத்தில் இணைந்த பிரபல நடிகர்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை 'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த படத்தில் தனுஷின் 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பென்ஸ் லோடிங்" என்று குறிப்பிட்டு அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் 'பென்ஸ்' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பேடி என்கிற கதாபாத்திரத்தை நாளை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளனர். அது மலையாள நடிகர் நிவின் பாலியாக இருக்கும் என ரசிகர் கமெண்ட் செய்து வருகின்றனர். தோல்விப்படங்களால் பாதிக்கப்பட்ட நிவின் பாலிக்கு பென்ஸ் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் மாதவனும் படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com