ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 4' அப்டேட்!

‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 4' அப்டேட்!
Published on

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பேட்டி ஒன்றில் 'காஞ்சனா 4' படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

ராகவேந்திரா புரடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 4' உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'காஞ்சனா 4' படத்தின் படப்பிடிப்பு கடந்த 23ம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை, ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com