

இதில் சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தவர். தமிழில் இவர் நடிக்கும் 3-வது படம், இது.
விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். வில்லன் வேடத்தில் நடிக்க ஒரு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது.