ஆரோக்கிய வாழ்வுக்கு ரகுல்பிரீத் சிங் யோசனை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுபிரீத் சிங் கைவசம் தற்போது இந்தியன் 2 மற்றும் 3 இந்தி படங்கள் உள்ளன.
ஆரோக்கிய வாழ்வுக்கு ரகுல்பிரீத் சிங் யோசனை
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுபிரீத் சிங் கைவசம் தற்போது இந்தியன் 2 மற்றும் 3 இந்தி படங்கள் உள்ளன. ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ஆரோக்கியம் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் திடமாக இருப்பது ஆகும். சில சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தில் சிக்கி அதில் இருந்து விடுபடுவது கஷ்டமாகி விடுகிறது. அதை எதிர்கொள்ள மனோ தைரியம் அதிகம் இருக்க வேண்டும்.

முன்பெல்லாம் உடற்பயிற்சி என்றால் ஜிம்மில் போய் செய்வது மட்டும்தான் என்று நினைத்து இருந்தேன். யோகா செய்வது சோம்பலான விஷயம் என்று நினைத்தேன். ஆனால் ஒருமுறை யோகா செய்ய ஆரம்பித்த பிறகு எனது எண்ணங்கள் தவறு என்று தெரிந்தது.

யோகாவால் நல்ல பலன் கிடைத்தது. யோகா செய்தால் மகிழ்ச்சியோடு தூங்கலாம். நமது உடலுக்கு சக்தியும் கிடைத்துவிடுகிறது. தினமும் இரவு தூங்கப்போவதற்கு முன்னால் டிஜிட்டல் பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள். மொபைல் போனை பயன்படுத்தாதீர்கள். இரவு 8 மணிக்கு கண்டிப்பாக தூங்க போய் விடுங்கள். சரியான தூக்கத்தோடு உடற்பயிற்சி யோகா செய்யுங்கள். நான் இதையேல்லாம் செய்துதான் திடமாக இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com